பகுதி 1


தமிழ் கிறுக்கள்கள்  - பகுதி  1

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
கன்னாபின்னா வென்று திட்ட..

கொல்லான் புலாலை மறுத்தானை இவ்வுலகு
ஓட்டல் இல்லாமல் சாவடிக்கும்...

கற்றதனால் ஆய பயனென்கொல் எம்என்சியில்
அல்லும்பகலும் குப்பைக் கொட்டாமல்....

இனிய உளவாக இன்னாத கூறல்
ஆன்ட்ராய்ட்இருப்ப ஆப்பிள்கவர்ந் தற்று....

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
தராமல் இருப்பதே அறிவு.....

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
அனைத்தையும் மறந்து போக.....

முகநக நட்பது நட்பன்று ஸ்கைப்பில்
உரை யாடுவதே நட்பு.....

மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் வைவாவில்
இளித்துக் கொண்டு இருத்தல்.....

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
வங்கிக் கணக்கனையது உயர்வு....

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் கண்டிப்பாக
பர்னால் போட்டப் பிறகு....

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ஸ்ச்சாட்
என்ன பயனும் இல....

குழல்இனிது யாழ்இனிது என்ப கார்த்திக்கின்
என்னோடுவாவா கேளா தவர்....

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
பிட்டுப் படம்பார்க்கா தார்.....

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
அமலாபாலில் உய்த்து விடும்....

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் ஸ்மைலியிழுக்குப் பட்டு :P

ஐஐடியில் இருக்கும் வலைவேகம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை....

வாய்மை எனப்படுவது யாதெனின் பதறாமல்
கைஉதறாமல் பொய் சொலல்....

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
தட்டிப்பார்த்து வாங்குதல் அறிவு....

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
ஏசியில் கணினிதட்டு பவர்....

பொய்மையும் வாய்மை யிடத்த வருவாய்வரியில்
நூறுரூபாய் வரும் எனின்....

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாங் காது....

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் குடும்பத்துக்கு.....

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
ஒருநாள்முதல்வன் சேர்ந்தொழுகு வார் #ரகுவரன்....

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
பால்ஈர்ப்பு வேற்றுமை யான்.....


Selengkapnya......